சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமான வாட்ஸப், 2009ஆம் ஆண்டு
முதல்
அதன் வாடிக்கையாளர்களுக்குச் செய்திகளை இலவசமாகப் பகிர்ந்து கொள்ளும்
வசதியை வழங்கி வருகிறது. முன்பெல்லாம் ஒரு குறுஞ்செய்தி அனுப்ப
வேண்டுமென்றால் நாம் பயன்படுத்தும் நெட்வொர்க்குகளில் அதற்கென தனியாக பணம்
செலுத்த வேண்டியிருந்தது. வாட்ஸப் பயன்படுத்த இன்டர்நெட் வசதி மட்டுமே
போதுமானதாக இருப்பதால் இதன் வருகைக்குப் பிறகு நெட்வொர்க்கில் குறுஞ்செய்தி
அனுப்புவது முற்றிலும் குறைந்து விட்டது. இதில் செய்திகள் மட்டுமல்லாமல்
போட்டோக்கள், வீடியோக்கள் அனுப்பும் வசதியும் உள்ளது. இதன் அடுத்தடுத்த
அப்டேட்களில் வாய்ஸ்-கால் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத்
தொடர்ந்து குரூப் வாய்ஸ்-கால் வசதியை தற்போது அறிமுகம் செய்யவுள்ளதாக
வாட்ஸப் நிறுவனம் அறிவித்துள்ளது.
